/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழ ஈ கட்டுப்படுத்தசெயல் விளக்க பயிற்சி
/
பழ ஈ கட்டுப்படுத்தசெயல் விளக்க பயிற்சி
ADDED : பிப் 15, 2025 01:35 AM
பழ ஈ கட்டுப்படுத்தசெயல் விளக்க பயிற்சி
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், பழ பயிர்களில் உரம், பூச்சி மேலாண் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், பயிர் சாகுபடி நில ஆவணங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதால் அரசின் திட்டங்கள், மானியங்கள் எளிதில் பெறலாம் என, பேசினார்.
ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண் குறித்து, தோட்டக்கலை துணை அலுவலர் ராகவேந்திரன், தோட்டக்கலை திட்டங்கள் பற்றி உதவி இயக்குனர் பிரியா விளக்கினர். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி மேலாளர் ரேணுகா ஆகியோர், பூச்சிகளை கட்டுப்படுத்தும் மஞ்சள் ஒட்டுப்பொறி, பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனகவர்ச்சி பொறிகள் செயல்படும் விதம் குறித்து, நேரடி செயல் விளக்கம் அளித்து விவசாயி
களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், 40 விவசாயிகள் பயன் அடைந்தனர்.