ADDED : பிப் 15, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குதிரை வாகனத்தில்வலம் வந்த சுவாமி
தாரமங்கலம்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேரோட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து, 13ம் நாளாக, நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு மேல் வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து சந்திரசேகரர், சாரதாம்பாள் சுவாமிகளை, குதிரை வாகனத்தில் எழுந்தருளச்செய்து பாரிவேட்டை உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து தேர் வீதிகளில் சென்று கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
இன்று நடராஜர், சிவகாமசுந்தரி திருவீதி உலாவில், அம்பாள் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு, தனியே கோவிலுக்கு வந்ததும் ராஜகோபுர கதவு அடைக்கப்படும். தொடர்ந்து கோவிலுக்கு வரும் சுவாமியை அம்பாளுடன் சேர்த்து வைக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி, கோவிலில் மாலையில் நடக்கிறது.