/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவி பாலியல் விவகாரம்ஆசிரியை க.குறிச்சிக்கு மாற்றம்
/
மாணவி பாலியல் விவகாரம்ஆசிரியை க.குறிச்சிக்கு மாற்றம்
மாணவி பாலியல் விவகாரம்ஆசிரியை க.குறிச்சிக்கு மாற்றம்
மாணவி பாலியல் விவகாரம்ஆசிரியை க.குறிச்சிக்கு மாற்றம்
ADDED : பிப் 27, 2025 02:20 AM
மாணவி பாலியல் விவகாரம்ஆசிரியை க.குறிச்சிக்கு மாற்றம்
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர்கள், கூட்டாக பாலியல் தொந்தரவு செய்தனர். ஆத்துார் மகளிர் போலீசார், 3 மாணவர்களையும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பாலியல் தொந்தரவு விவகாரத்தை மறைத்ததாக, தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்ரியா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து முத்துராமன், கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து ஆசிரியை பானுப்பிரியாவை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலுார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.