/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மது குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்'த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் தடாலடி

ADDED : மார் 21, 2025 01:47 AM
'மது குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்'த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் தடாலடி
ஆத்துார்:த.வெ.க., சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
அதில் சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 20 அடி துாரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்கள், அந்த வழியே செல்லும் மாணவியர், பெண்களை கேலி, கிண்டல் செய்வது தொடர்கிறது. தி.மு.க., ஆட்சியில், டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த கடையை உடனே மூட வேண்டும்.
இல்லை எனில் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லை என்றால், த.வெ.க., குடும்பத்தினர், பெண்கள், மாணவர்கள் திரண்டு, கடை முன், 'மது குடிக்கும்' போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.ஆனால், 'குடிக்கும் போராட்டம்' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டத்தில், சீருடையில் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் அணியினர், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.