/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நியமன தேர்வில் வென்றவர்களுக்கு பணிபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ADDED : ஏப் 08, 2025 01:50 AM
நியமன தேர்வில் வென்றவர்களுக்கு பணிபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
சேலம்:சேலம் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது:
தமிழகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு, 2024, பிப்.,4ல் நடந்தது. 12 ஆண்டுக்கு பின் நடந்த இத்தேர்வில், 37,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இருந்தாலும், அறிவிக்கப்பட்ட, 3,192 காலி பணியிடத்துக்கு, 2,803 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024 செப்.,10ல் வெளியிடப்பட்ட தமிழக அரசிதழில், 5,154 பட்டதாரி ஆசிரியர் காலியிடத்தில், தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்குழு மூலம் நியமிக்கப்பட்டு, கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையம், 7,371 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக, அவ்விடத்தில் நியமன தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளை
நியமிக்க வேண்டும். மேலும், மேலாண் தகவல் மையம் அறிவித்துள்ள, 7,371 காலியிடத்திலும், நியமன தேர்வில் வென்றவர்களை பணியமர்த்த, பட்டதாரிகளின் பணி எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டில், 2,803 பேரை மட்டும் தேர்வு செய்திருப்பது, வேதனையான ஒன்று. எனவே காலியிடத்துக்கு ஏற்ப, நியமன தேர்வில் வென்ற பட்டதாரி களை நியமித்து, 6 - 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கற்பித்தல் பணியை, தங்குதடையின்றி மேம்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.