/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
/
மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ADDED : பிப் 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சேலம், : சேலம், கொண்டப்பநாய்க்கன்பட்டி அருகே தாமரை நகரில், மான் கறி விற்கப்படுவதாக, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் நேற்று, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த, 4 பேரை பிடித்து விசாரித்ததில், ஏற்காடு, பெலாத்துாரை சேர்ந்த தாமரைகண்ணன், தேக்கம்பட்டி பழனிவேல், குமரேசன், கன்னங்குறிச்சி ரமேஷ் என்பதும், ஈரோடு மாவட்டத்தில் புள்ளிமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை கள்ளத்தனமாக விற்க முயன்றதும் தெரிந்தது.
இதனால், 4 பேருக்கும், 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.