ADDED : செப் 11, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, தமிழக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதி அருகே, தமிழக போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலையில் இருந்து வந்த ஒரு வேனில் சோதனை செய்தனர். குழந்தைகள் சாப்பிடும் தின்பண்ட பாக்கெட்டுகள் நடுவே, 41 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. 2.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 407 கிலோ புகையிலை பொருட்களை, வேனுடன் பறிமுதல் செய்-தனர். டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை தேடி வருவதா-கவும், போலீசார் தெரிவித்தனர்.