ADDED : ஆக 01, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல வார்டு அலுவலகத்தில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதை பார்வை-யிட்ட பின், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:
மாநகராட்சி, 'ரெயின்' தொண்டு நிறுவனம் இணைந்து, நாய்க-ளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாமை நடத்துகிறது. ஜூலையில், 596 தெரு நாய்கள், 333 வீட்டு நாய்கள் என, 929 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த நாய்களுக்கு அடுத்த ஆண்டும் தடுப்பூசி போட வேண்டும்.
செவ்வாய்ப்பேட்டை, வாய்க்கால்பட்டறை ஆகிய இடங்களில் உள்ள கருத்தடை மையங்களில், 943 நாய்களுக்கு ஜூலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.