/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'முதல்வர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது'
/
'முதல்வர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது'
'முதல்வர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது'
'முதல்வர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது'
ADDED : ஆக 13, 2024 07:57 AM
ஆத்துார்: முதல்வர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்பட பல்-வேறு இடங்களில் கொலை நடந்து வருவதால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது,'' என, சமூக சமத்-துவ படை தலைவர் சிவகாமி பேசினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்சியில் அம்பேத்கர் சிந்தனையாளர் கூட்டமைப்பு சார்பில், ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இதில், சமூக சமத்துவப்படை தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். முக்கிய குற்றவாளியாக உள்ள பெண்ணுக்கு, இவ்வளவு தொகை எப்படி, எங்கிருந்து வந்தது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நபர் யார் என்று விசாரிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினின், கொளத்துார் தொகுதியில் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை, கும்பல் படுகொலை செய்துள்-ளது. முதல்வர் தொகுதியில் நடந்தது போன்று, தமிழகம் முழு-வதும் பல்வேறு இடங்களில் கொலை நடந்து வருவதை பார்த்தால், சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். எஸ்.சி., பிரிவில், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். இவ்வாறு பேசினார்.
பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் நீதி வேண்டும் எனில், சி.பி.ஐ.,யிடம் வழக்கை ஒப்-படைத்து விசாரிக்க வேண்டும். தீண்டாமை கிராமம், தீண்டாமை இல்லாத கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதி விபரங்களை, தமி-ழக அரசு அறிவிக்க வேண்டும். வன்கொடுமை, ஜாதிகளை குறி வைத்து எடுக்கப்படும் சினிமாக்களை, உரிய முறையில் தணிக்கை செய்து வெளியிட வேண்டும்.இவ்வாறு கூறினார்.