/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்
/
ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்
ADDED : செப் 11, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: நீர்நிலை கரை, அதன் ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடப்படுகின்றன. இத்திட்டத்தை, சேலம் மாவட்டம் வீரபாண்டி, கொப்பம் ஏரிக்கரையில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியா-ளர்கள், கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்று, கொப்பம் ஏரியின்
மறுகரையில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் மூலம், 500க்கும் மேற்பட்ட பனை விதை-களை நட்டு மண் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.