/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் செயின் பறிக்க முயற்சி சிக்கிய புதுச்சேரி பெண்
/
பஸ்சில் செயின் பறிக்க முயற்சி சிக்கிய புதுச்சேரி பெண்
பஸ்சில் செயின் பறிக்க முயற்சி சிக்கிய புதுச்சேரி பெண்
பஸ்சில் செயின் பறிக்க முயற்சி சிக்கிய புதுச்சேரி பெண்
ADDED : செப் 04, 2024 10:20 AM
சேலம்: சேலம், அல்லிகுட்டை வெங்கடாஜலம் கால-னியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி பாலு, 56. இவரது மகள் பவித்ரா, 21, சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல பணியை முடித்து விட்டு நேற்று இரவு, 7:00 மணியளவில் 4 ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்வதற்-காக, 100 எண் கொண்ட அரசு டவுன் பஸ்ஸில் ஏறினார்.
கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பவித்-ராவின் கழுத்து பகுதியில் துணியை போட்டு, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்-கிலியை கத்திரிக்கோல் கொண்டு பறிக்க முயன்றார். பவித்ரா சங்கிலி, சேப்டி பின்னுடன் சேர்ந்து இருந்ததால் பறிக்க முடியவில்லை. இதனால் பவித்ரா கூச்சலிடவே, சக பயணிகள் செயின் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து, சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசா-ரிடம் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் நடத்திய விசா-ரணையில், புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்த சாந்தி, 44, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.