/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் முடிவால்ஆடுகள் விற்பனை சரிவு
/
பொங்கல் முடிவால்ஆடுகள் விற்பனை சரிவு
ADDED : ஜன 19, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் முடிவால்ஆடுகள் விற்பனை சரிவு
இடைப்பாடி, :பொங்கல் பண்டிகையை ஒட்டி, கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தைக்கு கடந்த, 3 வாரங்களாக ஆடுகள் வரத்து, விற்பனை அதிகமாக இருந்தது.
தற்போது பண்டிகை முடிந்ததால், நேற்று ஆடுகள் வரத்து சற்று குறைந்தது. அதன்படி கடந்த வாரம், 4,300 ஆடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்று, 3,750 ஆடுகளை கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7,450 முதல், 8,050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.75 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

