ADDED : ஜன 24, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீஸ் அவுட்போஸ்ட் செயல்படுமா?
ஓமலுார், ஓமலுார் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், 5,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு, 100க்கும் மேற்பட்ட கடைகள், தினசரி காய்கறி சந்தை, அரசு டாஸ்மாக் கடை உள்ளன. காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் உள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே உள்ள, போலீஸ் அவுட் போஸ்ட் அறை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் பயணியர் பாதுகாப்பு கருதி, அந்த அறையை திறந்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, வியாபாரி கள், பயணியர் வலியுறுத்தினர்.

