/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
/
வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
ADDED : பிப் 22, 2025 01:31 AM
வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, ஆட்டோ டிரைவர்கள் சிலர் கையில் பதாகைகள் ஏந்தியபடி, நேற்று வந்தனர். அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, 4 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனு:
மாவட்டம் முழுதும், 10,000க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். 10 ஆண்டாக ஆட்டோக்களுக்கு, 'பர்மிட்' வழங்காததால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறோம். டீசல் விலை உயர்ந்துள்ளது. வருவாயின்றி தவிக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். சி.என்.ஜி., எரிவாயு பொருத்தப்பட்ட ஆட்டோக்களை இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 'பர்மிட்' வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும்.