/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி மாணவர்களுக்குகாபி சாகுபடி பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்குகாபி சாகுபடி பயிற்சி
ADDED : பிப் 22, 2025 01:32 AM
கல்லுாரி மாணவர்களுக்குகாபி சாகுபடி பயிற்சி
ஏற்காடு: ?.தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் இணைக்கப்பட்ட, திண்டுக்கல் செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி அம்மாள் தோட்டக்கலை கல்லுாரி, 4ம் ஆண்டு மாணவ, மாணவியர், காபி சாகுபடி குறித்து, 6 நாள் பயிற்சிக்கு, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு, கடந்த, 17ல் வந்தனர். நிலைய இணை பேராசிரியர் மாலதி தொடங்கி வைத்தார்.
இதில் காபி ரகங்கள், இனப்பெருக்க முறைகள், நாற்றங்கால் மேலாண் தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகள், மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, செயல் விளக்கம் அளிக்கப்பட்டன. மாணவ மாணவியர், காபி விதைப்பு, நாற்று உற்பத்தி செய்தல் உள்ளிட்டவற்றை செய்து பயிற்சி பெற்றனர்.
மேலும் ஏற்காடு காபி வாரியத்துக்கு கண்டுணர் சுற்றுலாவாக சென்றனர். அங்கு அதன் செயல்பாடு குறித்து, வாரிய முதன்மை தொடர்பு அதிகாரி ஸ்ரீதரன் விளக்கினார். இதன் ஏற்பாடுகளை, நிலைய தோட்டக்கலை இணை பேராசிரியர் சண்முகசுந்தரம், பூச்சியியல் இணை பேராசிரியர் செந்தில்குமார் செய்திருந்தனர். கல்லுாரி உதவி பேராசிரியர் வர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.