/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாக்கத்தால் விபத்து:மனைவி பலிகணவர் படுகாயம்
/
துாக்கத்தால் விபத்து:மனைவி பலிகணவர் படுகாயம்
ADDED : பிப் 23, 2025 01:28 AM
துாக்கத்தால் விபத்து:மனைவி பலிகணவர் படுகாயம்
சங்ககிரி:சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஹரிகோவிந்த் சம்பத், 65. இவரது மனைவி தீபஹரி, 57. இவர்கள், கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின், 'டிஸையர்' காரில் சென்னை புறப்பட்டனர். நேற்று மதியம், 1:30 மணிக்கு, சங்ககிரி அருகே ஆவரங்கம்பாளையத்தில் வந்தபோது, காரை ஓட்டி வந்த ஹரிகோவிந்த் சம்பத் துாங்கிவிட்டார்.
இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் உள்ள சுவர் மீது மோதியது. இதில் தீபஹரி பலியானார்.
படுகாயமடைந்த ஹரிகோவிந்த் சம்பத், மேல்கிசிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.