/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்து முனியப்ப ஸ்வாமி கோவில் 15ல் கும்பாபிஷேகம்
/
முத்து முனியப்ப ஸ்வாமி கோவில் 15ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2011 03:23 AM
ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி முத்து முனியப்ப ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் 15ம் தேதி நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலையில் காவேரியில் இருந்து யானை, குதிரை, பசு ஆகியவற்றுடன் தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலத்துடன் எடுத்து வரப்படுகிறது.
மாலையில் பிரவேசப் பலி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது.நாளை காலை கணபதி, லட்சுமி, நவக்கிரஹ ஹோமங்கள், தேவதா அனுக்ஞை, தன பூஜை, மிருத்சங்ரஹணம், அங்குர பூஜை ஆகியன நடக்கிறது. மாலையில் ரக்ஷõபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலாப்ரவேசம், பூர்ணாஹூதி தீபாரதனை ஆகியன நடக்கிறது. 14ம் தேதி காலையில் ஆசார்ய விசேஷ சாந்தி, இரண்டாம் கால வழிபாடு மண்டப வேதிகைபூஜை, வேதமந்ர சிவாகம், மூலமந்ரஜடம் பாராயணம் ஹோமமும், மாலையில் முத்து முனியப்பனுக்கு மூன்றாம் கால யாக பூஜை, கண் திறப்பு பூஜை, புதிய விக்ரஹங்களுக்கு ஜலாதி வாசம், தான்யாதி வாசம், ரத்னநியாசம், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியன நடக்கிறது.வரும் 15ம் காலையில் நன்காம் கால யாக பூஜை, ரக்ஷõபந்தனம், பிம்பசுத்தி, நாடீ சந்தானம், தத்வசம்யோஜனம், கலசம் புறப்பாடு ஆகியன நடக்கிறது. தொடர்ந்து முனிஸ்வரர் கும்பாபிஷேகம், பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தசதானம், தசதரிசனம், மஹா அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை முத்து முனியப்ப ஸ்வாமி கோவில் பங்காளிகளும், திருப்பணி குழுவினரும் செய்கின்றனர்.

