/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முறைகேடாக மாத்திரை விற்ற 16 'மெடிக்கல் ஷாப்' உரிமம் ரத்து
/
முறைகேடாக மாத்திரை விற்ற 16 'மெடிக்கல் ஷாப்' உரிமம் ரத்து
முறைகேடாக மாத்திரை விற்ற 16 'மெடிக்கல் ஷாப்' உரிமம் ரத்து
முறைகேடாக மாத்திரை விற்ற 16 'மெடிக்கல் ஷாப்' உரிமம் ரத்து
ADDED : ஜன 30, 2025 01:08 AM
முறைகேடாக மாத்திரை விற்ற 16 'மெடிக்கல் ஷாப்' உரிமம் ரத்து
சேலம்:சேலம், நாமக்கல் மண்டலங்களில், மருந்து கட்டுப்பாடுத்துறை உதவி இயக்குனர்கள் சதிஷ், மாரிமுத்து தலைமையில், கடந்த நவம்பர், டிசம்பரில் மருந்து கடைகளில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மருந்தாளுனர் இல்லாதது, மருத்துவர் பரிந்துரை சீட்டின்றி, ரசீது தராமல் மருந்து, மாத்திரை விற்றது, மருந்து கொள்முதல், விற்பனை பதிவேடு பராமரிப்பின்மை உள்ளிட்ட முறைகேடு கண்டறியப்பட்டு, 16 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேல் நடவடிக்கை தொடர, அதன் அறிக்கை, இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, 16 மருந்து கடைகளின் உரிமத்தை தற்காலிக ரத்து செய்து, சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.அதன்படி நாமக்கல் மண்டலத்தில், நாமக்கல் டவுன், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடை, திருச்செங்கோட்டில் பங்களா தெருவில் உள்ள மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சன்னியாசி குண்டு, செரிரோடு, அம்மாபேட்டையில், 2 கடை, தலைவாசல் அடுத்த மும்முடி என, 8 மருந்து கடைகளுளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது. தவிர நாமக்கல்லில் உரிமம் இன்றி விற்ற மருந்து கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் சங்ககிரி, ஜலகண்டாபுரத்தில் தலா, 2, கொளத்துார், இளம்பிள்ளை, மேட்டூர், நங்கவள்ளியில் தலா 1 என, 8 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 நிறுவனங்கள் மீது வழக்கு
சேலம், வீராணம் போலீசார், போதை மாத்திரைகள் விற்றது தொடர்பாக, கோகுல்ராஜ், 29, தினேஷ்கண்ணன், 27, கோகுலன், 26, ஆகியோரை, கடந்த, 26ல் கைது செய்தனர். இதில் தினேஷ் கண்ணன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில், கண்ணா பார்மஸி வைத்துள்ளார். கோகுலன், கே.ஆர்.தோப்பூரில் ஹரிணி பார்மா வைத்துள்ளார். இதனால் கண்ணா பார்மஸி, ஹரிணி பார்மா மீது, மருந்து கட்டுப்பாடு துறையினர் வழக்குப்பதிந்து, மேல் நடவடிக்கை எடுக்க
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.