/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச கடித போட்டி 17க்குள் விண்ணப்பிக்கலாம்
/
சர்வதேச கடித போட்டி 17க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 06, 2025 01:26 AM
சேலம்: இந்திய தபால் துறை சார்பில், அகில இந்திய அளவில் சர்வதேச கடித போட்டி, வரும், 19ல் நடக்க உள்ளது. 'நீங்கள் உங்களை கடல் என கற்பனை செய்து கொண்டு, உங்களை ஏன் மற்றும் எப்படி கவனித்து கொள்ள வேண்டும்' என்பதை, யாரோ ஒருவருக்கு விளக்க கடிதம் எழுத வேண்டும். பங்கேற்போர் வயது, 9 முதல், 15க்குள் இருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், இந்தி மொழியில் கடித வடிவில், 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் முறையே, 25,000, 10,000, 3,000 ரூபாய் வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்கள் முறையே, 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும். விரும்பும் போட்டியாளர்கள், வரும், 17க்குள், 'முதுநிலை தபால் கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்' எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விபரம் பெற, 0427 - 2253050 என்ற எண்ணில் அழைக்கலாம் என, சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.