/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது
/
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது
ADDED : பிப் 05, 2025 01:32 AM
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது
சேலம்,: சேலம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை, பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அதன் நிர்வாகிகள் விஜயபானு, 49, உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அறக்கட்டளைக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் துண்டறிக்கை வெளியிட்டு, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் அம்பேத்கர், 55, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அவர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிந்த சேலம் டவுன் போலீசார், போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.
மீறி அவர் உள்பட பலர், நேற்று காலை, சேலம் கோட்டை மைதானத்தில், விஜயபானுவை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அம்பேத்கர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றார். ஆனால் அறக்கட்டளை ஏஜன்ட்கள் உள்ளிட்டோர், மறியலுக்கு முயன்றனர். இதில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த, தர்மபுரி, பாலக்காட்டை சேர்ந்த சீனிவாசன், 54, சுகந்தி தேவி, 34, சேலம், அம்மாபேட்டை பாஸ்கர், 36, செல்வம், 56, பரணி, 45, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்கள், மதியம், 1:00 மணிக்கு கலைந்து சென்றனர்.