/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலாண்டு மாணவருக்கு வகுப்பு தொடக்க விழா
/
முதலாண்டு மாணவருக்கு வகுப்பு தொடக்க விழா
ADDED : செப் 02, 2024 02:18 AM
சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாண்டு மாண-வர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி தொடக்கிவைத்தார். முன்னதாக அனைவரையும் பேராசிரியை தமிழ்சுடர் வரவேற்றார்.
தொடர்ந்து துறையின் சிறப்பம்சங்கள், பெற்ற விருதுகள், செயல்-பாடுகள் குறித்து டீன் செந்தில்குமார் எடுத்துரைத்தார். பேச்சாளர், தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், மாணவர்களுக்கு ஊக்கமளிக்-கும்படி பேசி, வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பல்கலையின் மாணவ செயல்முறை பயிற்சி இயக்-குனர் ஜெய்கர், புதுமை படைத்தல், தொழில்முனைவோர் அமைப்பின் இயக்குனர் ஞானசேகர், மாணவ நல இயக்குனர் சண்முகசுந்தரம், பேராசிரியை பிரியாமதி
பேசினர். மேலும் துறை மூத்த மாணவர்கள், கல்லுாரி அனுபவங்கள், செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியை கலை-வாணி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, துறை பேராசி-ரியர்கள், அலுவலக பணியாளர்கள்
செய்திருந்தனர்.