ADDED : செப் 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அடுத்த வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன், 41. இவர், தனக்கு சொந்தமான நான்கு ஆடுகளை வீட்டுக்கு முன்பாக உள்ள பட்டியில், நேற்று அடைத்து வைத்திருந்தார். பகல், 1:00 மணியளவில் வந்து பார்த்தபோது, ஆடுகளை காணவில்லை. புகாரின் பேரில், இரும்பாலை போலீசார் வழக்குபதிந்து, அங்குள்ள கெங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் தினேஷ், 29, என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்,
ஆடுகள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து மூன்று ஆடுகள் மீட்கப்பட்டன. ஒரு ஆட்டை வெட்டி கூறுபோட்டு, 6,000 ரூபாய்க்கு விற்றதாக கூறினார். இதையடுத்து, பணத்தையும் பறிமுதல் செய்து, வாலிபரை
சிறையில் அடைத்தனர்.

