/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதிமீறி மண் எடுத்ததை தடுத்த ஒன்றிய கமிஷனருக்கு மிரட்டல்
/
விதிமீறி மண் எடுத்ததை தடுத்த ஒன்றிய கமிஷனருக்கு மிரட்டல்
விதிமீறி மண் எடுத்ததை தடுத்த ஒன்றிய கமிஷனருக்கு மிரட்டல்
விதிமீறி மண் எடுத்ததை தடுத்த ஒன்றிய கமிஷனருக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய பராமரிப்பில் மூக்-குத்திபாளையம் ஏரி உள்ளது. அங்கு விவசா-யத்துக்கு வண்டல் மண் எடுக்க, வருவாய்த்-துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மண் எடுக்கப்பட்டது. இதனால் மண் எடுப்பது கடந்த, 26ல் தடுத்து நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் கமிஷனர் கார்த்திகேயன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், 'மண் அள்ளுவதை ஏன் நிறுத்துனீங்க; மண் எடுப்போம்; முடிந்தால் தடுத்து பார்' என, மிரட்டி உள்ளார். அதேபோல் மண் எடுப்பதை கண்காணிக்கும் பொறுப்பு அலுவலராக நியமிக்-கப்பட்ட ஊராட்சி செயலருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் கூறி-யதாவது:ஏரியில் மண் எடுக்க அனுமதி அளித்த விப-ரத்தை முறையாக எங்களுக்கு தெரியப்படுத்த-வில்லை. அங்கு, 3 பேர், 3 இடங்களில் தனித்த-னியே, 3 மீட்டர் ஆழத்துக்கு கீழ் மண் எடுத்-தனர். ஒரு மீட்டருக்கு எடுக்க அனுமதி வழங்-கப்பட்டது. மேலும் வண்டல் மண்ணை தவிர்த்து, மொரம்பு மண் எடுத்து வியாபாரம் செய்கின்றனர். கமிஷனர், ஊராட்சி செயலரை, மண் எடுக்க அனுமதி பெற்றவர் மிரட்டி-யுள்ளார். மண் கூடுதலாக எடுக்கப்பட்டதற்கு அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.