/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்
/
மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்
ADDED : மே 08, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட குழுவினர், போதக்காடு காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது
ஒருவர் மரப்பட்டைகளை கத்தியால் வெட்டி உரித்துக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது தர்மபுரியை சேர்ந்த மாது, 49 என்பதும், மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் தெரிந்தது. அவருக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.