/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
/
3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
ADDED : செப் 11, 2024 07:10 AM
சேலம்: சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரெட்டியூர் அண்ணா சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில், கரூர் அகதிகள் முகாமை சேர்ந்த, லாரி உரிமை-யாளர் பிரசாந்த், 37, சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டியில் வசிப்பதும், மற்றொருவர் பெரிய மோட்டூரை சேர்ந்த தீபன்ராஜ் என்பதும் தெரிந்தது. இருவரும், மாமாங்கம், ரெட்டியூரில் உள்ள மக்க-ளிடம், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகா கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, 3,900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவ-ரையும்
கைது செய்தனர்.