/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெயின் கோவிலில் 25 கிலோ வௌ்ளி திருட்டு
/
ஜெயின் கோவிலில் 25 கிலோ வௌ்ளி திருட்டு
ADDED : ஆக 19, 2024 06:09 AM
சேலம்: சேலத்தில் ஜெயின் கோவிலில், 25 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, ருத்ரப்பன் தெருவில் ஜெயின் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க பூசாரி வந்தார். கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ----அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு, சுவாமிகளின் வெள்ளி பொருள் திருட்டு போனது தெரிந்தது. அவர் தகவல்படி டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலை-மையில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசா-ரித்தனர்.கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்-தனர். கோவிலில் இருந்த, 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அதிகாலை ஒருவர் கோவில் பகுதிக்கு வந்துள்ளார்.காவலாளி இருந்ததால் அவர் திரும்பி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் வந்தவர், காவலாளி கோவில் எதிரே மடத்தில் துாங்கி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.பின், 2:00 மணிக்கு கோவில் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதித்தார். முகமூடி, கையில் கிளவுஸ் அணிந்திருந்தார். பூட்டுகளை உடைத்து, மூன்று சுவாமிகளின் வெள்ளி கிரீடம், மணி சட்டம், வெள்ளி தட்டு உள்பட, 25 கிலோ வெள்ளி பொருட்களை திருடியுள்ளார். 3:30 மணி-யளவில் வெளியில் சென்றவர், பால் மார்க்கெட் வழியே நடந்து சென்றுள்ளார். தொடர்ந்து விசா-ரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.