/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீர் பாட்டில் வீசிய விவகாரம்4 கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
/
தண்ணீர் பாட்டில் வீசிய விவகாரம்4 கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
தண்ணீர் பாட்டில் வீசிய விவகாரம்4 கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
தண்ணீர் பாட்டில் வீசிய விவகாரம்4 கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 04, 2025 01:37 AM
தண்ணீர் பாட்டில் வீசிய விவகாரம்4 கவுன்சிலர்கள் 'சஸ்பெண்ட்'
ஆத்துார்:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. அங்கு கடந்த பிப்., 27ல், கவுன்சிலர் கூட்டம் நடந்தது. அதில், தி.மு.க.,வை சேர்ந்த, 13வது வார்டு கவுன்சிலர் கலியவரதராஜ், 7வது வார்டு கவுன்சிலர் செந்தில் இடையே பிரச்னை எழுந்து ஒருவரையொருவர் மீது தண்ணீர் பாட்டில் வீசிக்கொண்டனர்.
இந்த விவகாரத்தில், 4 கவுன்சிலர்களுக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி கவிதா, நேற்று தபாலில் அனுப்பிய உத்தரவு:
கடந்த, 2024 அக்., 28ல் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில், கவுன்சிலர்கள், 3வது வார்டு நடராஜ், 5வது வார்டு வரதராஜன், 13வது வார்டு கலியவரதராஜ், 17வது வார்டு திருச்செல்வன் ஆகியோர், நாகரிகமின்றி பேசி, தலைவியை ஒருமையில் பேசி கூட்டம் நடத்தவிடாமல் இடையூறு செய்தனர். இவர்கள் மீது டவுன் பஞ்சாயத்து கமிஷனர், விளக்கம் கேட்டு, 4 கவுன்சிலர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. தொடர்ந்து பிப்., 27ல் நடந்த கூட்டத்தில் கலியவரதராஜ் அநாகரிமாக பேசி, செந்தில் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதலில் ஈடுபட்டார். அவருடன் நடராஜ், திருச்செல்வன், வரதராஜன் ஆகியோர், தீர்மானங்களை வாசிக்கவிடாமல் தரக்குறைவாக பேசி தகராறு செய்தனர். இதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், கலியவரதராஜ், வரதராஜன், காங்., கவுன்சிலர் திருச்செல்வன் ஆகியோர், இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

