/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டர்பிளை மேம்பாலத்தின் இணைப்பு பட்டை உடைந்து விலகியுள்ளதால் ஆபத்து

ADDED : ஜூலை 02, 2024 05:25 AM
வீரபாண்டி : நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் இணைப்பு பட்டை உடைந்து, விலகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதோடு, விபத்து நடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் - கோவை நான்கு வழிச்சாலை கொண்டலாம்பட்டி அருகே, 15 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 2 கி.மீ., நீளத்தில் பட்டர்பிளை மேம்பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது. நான்கு வழிச்சாலையில் சேலத்தில் இருந்து, நெய்காரப்பட்டி செல்லும் வழியில் பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள, இரும்பு இணைப்பு பட்டைகளில் ஒன்று உடைந்து விலகியும், சிமென்ட் கலவை பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரிகிறது.
நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களின் டயரை இணைப்பு பட்டை மற்றும் துருப்பிடித்த கம்பிகள் பதம் பார்த்து, பஞ்சராக்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதோடு, விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவில் குடும்பத்துடன், கார்களில் இப்பாலத்தை கடக்கும் போது டயர் பஞ்சராகி விட்டால் உதவிக்கு யாருமின்றி, அச்சத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடைந்து விலகிய இணைப்பு பட்டைகளை மாற்றி, அந்த இடத்தை சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.