/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பட்டய கணக்காளருக்கு அதிக தேவை உள்ளது'
/
'பட்டய கணக்காளருக்கு அதிக தேவை உள்ளது'
ADDED : பிப் 28, 2025 01:34 AM
'பட்டய கணக்காளருக்கு அதிக தேவை உள்ளது'
சேலம்:சேலம் பட்டய கணக்காளர் சங்கத்தில், 500க்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அச்சங்க புது நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. புது நிர்வாக குழுவில் வீரப்பன் தலைவராகவும், கார்த்திக் துணைத்தலைவராகவும், கவுரி செயலராகவும், கார்த்திகேயன் பொருளாளராகவும் பதவியேற்றனர்.
தொடர்ந்து இந்திய பட்டய கணக்காளர் சங்க, தேசிய முன்னாள் தலைவர் ராமசாமி பேசியதாவது:இன்றைய தொழில் முறை மற்றும் வேலைவாய்ப்பில் பட்டய கணக்காளர்களுக்கு அதிக தேவை உள்ளது. சி.ஏ., படிப்பை மாணவர்கள் தேர்வு செய்து சிறப்பான எதிர்காலத்தை பெற முடியும். இத்துறையிலும், ஏ.ஐ., மற்றும், 'டேட்டா அனலடிக்ஸ்' பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். 2024ம் ஆண்டு, தேசிய அளவில் சிறந்த கிளையாக, சேலம் பட்டய கணக்காளர் சங்கம் விருது பெற்றுள்ளது. மாணவர் கிளைக்கான விருதையும் பெற்றது.
இவ்வாறு அவர் பேசினார். தென் மாநில மண்டல அமைப்பின் உறுப்பினர் அருண், பட்டய கணக்காளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.