/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவர் ரூ.10 லட்சம் மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
/
மருத்துவர் ரூ.10 லட்சம் மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
மருத்துவர் ரூ.10 லட்சம் மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
மருத்துவர் ரூ.10 லட்சம் மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ADDED : செப் 17, 2024 01:37 AM
மருத்துவர் ரூ.10 லட்சம் மோசடி
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சேலம், செப். 17-
சேலம் மருத்துவர், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சேலம், பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் லோகநாதன், 47. இவர், நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினபுவிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். சொந்தமாக வீடு வாங்க திட்டமிட்டு, நிலத்தரகர் கார்த்திகேயன் மூலம் சூரமங்கலம் பகுதியில் வீடு உள்ளது என தெரிவித்தார். அவர் கூறிய வீட்டின் உரிமையாளர் பல் மருத்துவர் மணிவண்ணன் என தெரியவந்தது. வீடு பிடித்திருந்ததால் அவரிடம், 81 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முடித்தோம். முன் பணமாக மருத்துவர் மணிவண்ணன், அவரது தாய் பாலநாகம்மாள், தந்தை குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், டி.டி.யாக நான்கு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய், ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தேன்.
பணத்தை பெற்று கொண்டு, அடுத்த மாதம் கிரையம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். உண்மை என நம்பி சென்றேன். பின், ஒரு மாதம் கழித்து சென்று கேட்ட போது மருத்துவர் காலம் தாழ்த்தினார். கடந்த வாரம் கேட்ட போது, மருத்துவர் மணிவண்ணன், அவரது பெற்றோர் சேர்ந்து பணம் தர முடியாது; வீடும் காலி செய்து கொடுக்க மாட்டோம் என கூறி, தகாத வார்தையில் பேசி உயிரோடு கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசாரிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என கூறினர். எனவே, இது குறித்து விசாரணை நடத்தி உண்மை தன்மை அறிந்து, மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.