/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டேங்கர் லாரி மோதி கட்டட ஒப்பந்ததாரர் பலி
/
டேங்கர் லாரி மோதி கட்டட ஒப்பந்ததாரர் பலி
ADDED : ஜூலை 31, 2024 07:34 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்த, கட்டட ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், 43.
இவரது உறவினர் கதிர்வேல், 25. இருவரும் நேற்று மாலை, 4:00 மணிக்கு, வாழப்பாடியில் இருந்து வெள்ளாளப்பட்டி நோக்கி, 'எப் இஸட்' பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். ராஜேந்திரன் ஓட்டினார். பேளூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கருமந்-துறையில் இருந்து மங்களபுரம் நோக்கி, பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி, பைக் மீது மோதி-யது. இதில் சம்பவ இடத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார். கதிர்வேல் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். வாழப்பாடி போலீசார் டேங்கர் லாரி டிரைவர் சந்தோஷ், 29, என்பவரிடம் விசாரிக்-கின்றனர்.