sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மேட்டூர் அணை நிரம்பியது மகிழ்ச்சி உபரிநீர் கடலில் கலப்பது வேதனை'

/

'மேட்டூர் அணை நிரம்பியது மகிழ்ச்சி உபரிநீர் கடலில் கலப்பது வேதனை'

'மேட்டூர் அணை நிரம்பியது மகிழ்ச்சி உபரிநீர் கடலில் கலப்பது வேதனை'

'மேட்டூர் அணை நிரம்பியது மகிழ்ச்சி உபரிநீர் கடலில் கலப்பது வேதனை'


ADDED : ஜூலை 31, 2024 07:45 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: ''மேட்டூர் அணை நிரம்பி வழிவது மகிழ்ச்சி. அந்த நீர் உபரியாக வெளியேறி கடலில் கலப்-பது வேதனை,'' என, பா.ம.க., தலைவர் அன்பும-ணியின் மனைவி சவுமியா கூறினார்.இதுகுறித்து, மேட்டூர் அணையை பார்வை-யிட்ட பின் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணை நிரம்பி வழிவது மகிழ்ச்சி. அந்த நீர் உபரியாக வெளியேறி கடலில் கலப்-பது வேதனை. அந்த நீரை சேமிக்க காவிரி குறுக்கே மேலும் பல தடுப்பணைகள் கட்ட வேண்டும். அதில் நீரை தேக்குவதன் மூலம் சுற்றுப்பகுதி ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர்-மட்டம் உயரும். அதன்மூலம் பயிர் சாகுபடி, குடிநீர் பிரச்னைகளை தீர்க்க முடியும்.கடந்த, 2022ல் மேட்டூர் அணையில், 420 டி.எம்.சி., உபரிநீர் கடலில் கலந்து வீணாகியுள்-ளது. சேலம் மாவட்டத்துக்கு, 5 டி.எம்.சி., தர்மபு-ரிக்கு, 2 டி.எம்.சி., நீர் கிடைத்தால் போதும். இரு மாவட்டங்களும் செழிப்பாகிவிடும். மேட்டூர் அணை நீரை நம்பி, 25 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், மேட்டூர் அணை நீரையே குடிநீராக பயன்படுத்-துகின்றனர். ஒரு சொட்டு நீரை கூட நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் இயற்கை நமக்கு வழங்கும் நீரை மக்களுக்கும் வழங்காமல் கட-லுக்கு அனுப்புகிறோம். தண்ணீர் அதிகம் வந்-தாலும், அதிக வறட்சி ஏற்பட்டாலும் பாதிக்கப்-படுவது விவசாயிகளும், விவசாயமும்தான். அதற்கு தண்ணீரை சேமிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை அரசு நிறைவேற்றும்பட்சத்தில் தென் மாவட்ட மக்கள் பலனடைவர். நீர் மேலாண் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு தோல்வி அடைந்துள்-ளது. நம் உரிமைக்கு நாம் தான் போராட வேண்டும். வெறும் கடிதம் மட்டும் அரசுக்கு அனுப்புவதால் எந்த பலனும் இல்லை. கர்நா-டகா மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதா-சிவம், மேற்கு மாவட்ட செயலர் ராஜசேகரன், மேட்டூர் நகரம், கொளத்துார் ஒன்றிய நிர்வா-கிகள், மகளிரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us