/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் - பைக் நேருக்கு நேர் மோதல் எஸ்.எஸ்.ஐ., மகன் உள்பட 3 பேர் பலி
/
மொபட் - பைக் நேருக்கு நேர் மோதல் எஸ்.எஸ்.ஐ., மகன் உள்பட 3 பேர் பலி
மொபட் - பைக் நேருக்கு நேர் மோதல் எஸ்.எஸ்.ஐ., மகன் உள்பட 3 பேர் பலி
மொபட் - பைக் நேருக்கு நேர் மோதல் எஸ்.எஸ்.ஐ., மகன் உள்பட 3 பேர் பலி
ADDED : ஆக 04, 2024 11:20 PM
ஆத்துார்:சேலம் அருகே மொபட் - பைக் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மகன் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேற்குராஜாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 63. கோழிப்பண்ணை உரிமையாளர். இவரது மகன் தரணி ராமமூர்த்தி, 33; இருவரும், 'யமஹா பெசினோ' மொபட்டில், மல்லியக்கரையில் இருந்து தம்மம்பட்டி நோக்கி நேற்று மாலை சென்றனர். தரணி ராமமூர்த்தி ஓட்டினார்.
மல்லியக்கரை, கருத்தராஜாபாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், 23; ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., அழகேசன் மகன் தினேஷ்குமார், 23; பட்டதாரிகளான இவர்கள், கொல்லிமலை சென்றுவிட்டு தம்மம்பட்டி வழியே, 'யமஹா எப்.இசட்' பைக்கில் ஆத்துார் நோக்கி எதிரே வந்தனர். பைக்கை மணிகண்டன் ஓட்டினார். மொபட், பைக்கை ஓட்டி வந்த இருவரும், ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
கீரிப்பட்டி டவுன் பஞ்., அலுவலகம் அருகே மேல்கணவாய் பஸ் நிறுத்தம் பகுதியில், எதிர்பாராதவிதமாக மொபட் மீது எதிரே வந்த பைக் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பெரியசாமி, மணிகண்டன் சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயமடைந்த மற்ற இருவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ்குமார் இறந்தார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.