/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துார்வாரப்படாத சாக்கடையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
/
துார்வாரப்படாத சாக்கடையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துார்வாரப்படாத சாக்கடையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துார்வாரப்படாத சாக்கடையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஆக 31, 2024 01:30 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர் பாலசுப்ரமணியம்: பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் சாக்கடையில், 3 அடிக்கு மண் அடைத்துள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாக்-கடை மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார வேண்டும்.தலைவர் குணசேகரன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பா.ம.க., கவுன்சிலர் குமரேசன்: 27 வார்டுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பணி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை அடுத்த கூட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.கமிஷனர் காஞ்சனா: பட்டியல் கொடுக்கப்படும்.தொடர்ந்து, 1 முதல், 6 வரை, 8, 24 ஆகிய வார்டுகளில் குடிநீர், தெருவிளக்கு தேவை என, அந்தந்த கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 'அரசிடம் இருந்து நிதி வந்ததும் செய்து கொடுக்கப்படும்' என, குணசேகரன்
கூறினார்.அதேபோல், 7, 17, 18, 22, 24, 26வது வார்டுகளில், 'குப்பை, சாக்-கடை துார்வாருவது இல்லை. அப்படியே சாக்கடையை துார்வாரினாலும் அதன் கழிவு அள்ளாமல் மீண்டும் சாக்கடையில் கலக்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசு மருந்தும் அடிப்பதில்லை' என, அந்தந்த கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.அதற்கு துப்புரவு ஆய்வாளர் பிரின்ஸ் சகாயராஜ், 'கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒன்று பழுதாகியுள்ளது. மற்றொன்று மட்டும் பயன்பாட்டில் உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது' என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து, 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., துணைத்தலைவர் தனம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
'முறையற்ற இணைப்பைதுண்டிக்க ஒத்துழைப்பு'இதனிடையே தலைவர் குணசேகரன் பேசுகையில், ''27 வார்டுக-ளிலும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் ஏராளமாக உள்ளன. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் பாகுபாடின்றி முறையற்ற
இணைப்புகளை கண்டறிந்து துண்-டிக்க, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என கேட்டார். அதற்கு கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரி-வித்தனர்.