ADDED : ஜூலை 06, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் கோட்டம் சார்பில், வார இறுதி நாட்களையொட்டி, நேற்று முதல், வரும், 8 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம், இணையதளம் வழியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுவதால், நெரிசலை தவிர்த்து பயணம் மேற்கொள்ள, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.