/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் சாலை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்தில் திட்டம்
/
மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் சாலை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்தில் திட்டம்
மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் சாலை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்தில் திட்டம்
மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் சாலை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்தில் திட்டம்
ADDED : ஜூலை 02, 2024 05:24 AM
பனமரத்துப்பட்டி : மல்லுார்-பனமரத்துப்பட்டி சாலை, மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில், மல்லுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், அதன் எல்லையில் உள்ள சாலையை, 1.10 கோடி ரூபாயில் புதுப்பிக்க, முன்மொழிவு தயாரித்துள்ளது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் இருந்து மாக்கனுார், பாறையூர் வழியாக மல்லுாருக்கு தார்ச்சாலை செல்கிறது. அச்சாலை மோசமாக சீரழிந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலை, பனமரத்துப்பட்டியிலிருந்து மாக்கனுார் வரை, மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து, பாறையூர் அடுத்த மூர்த்தி பழத்தோட்டம் வரை, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து, சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை வரை, மல்லுார் டவுன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், அதன் எல்லையில் உள்ள சாலையை புதுப்பிக்க, நகர்புற சாலை மேம்பாடு திட்டத்தில், ரூ. ஒரு கோடியே, 10 லட்சத்தில் மதிப்பீடு தயாரித்துள்ளது. கடந்த, 28ல், தலைவர் லதா, துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில், பனமரத்துப்பட்டி-மல்லுார் சாலையை முழுமையாக புதுப்பித்தால் நன்றாக இருக்கும். தனித்தனியாக, கால இடைவெளியில் புதுப்பித்தால் சாலை சீராக இருக்காது. மாநில நெடுஞ்சாலை மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.