ADDED : மார் 18, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா பதுக்கியவர் கைது
சேலம்:சேலம், சூரமங்கலம் போலீசார், நேற்று மதியம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, மணியனுார், சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், 29, என தெரிந்தது. அவரை சோதனையிட்டதில், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடித்து, பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை, போலீசார் கைது செய்தனர்.

