/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை
/
கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை
ADDED : ஏப் 02, 2025 01:51 AM
கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை
ஆத்துார்:சேலம் - உளுந்துார்பேட்டை 4 வழிச்சாலையில் ஆத்துார், தலைவாசல், வாழப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில், சாலையோரம் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆத்துார், கொத்தாம்பாடி உள்ளிட்ட பகுதி கொடிக்கம்பங்களில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், 'கடந்த ஜன., 27ல், சென்னை உயர்நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக்கம்பங்களை, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள், 12 வாரங்களுக்குள் அகற்றிக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனால்
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், அமைப்பினர் முன்வந்து, கொடிக்கம்பங்கள், கான்கிரீட் பீடம் உள்ளிட்ட கட்டுமானங்களுடன், 15 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லை எனில், மாவட்ட நிர்வாகம், போலீசார் மூலம் கொடிக்கம்பங்கள் நிரந்தரமாக அகற்றப்படும்' என கூறப்
பட்டுள்ளது.