/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவேரி மருத்துவமனையால்காப்பாற்றப்பட்ட இளம்பெண்
/
காவேரி மருத்துவமனையால்காப்பாற்றப்பட்ட இளம்பெண்
ADDED : ஏப் 06, 2025 01:23 AM
காவேரி மருத்துவமனையால்காப்பாற்றப்பட்ட இளம்பெண்
சேலம்:ஒரு சுற்றுலா வாகனம், கடந்த மாதம் விபத்துக்குள்ளானதில், 18 வயது பெண்ணுக்கு, வயிற்றுப்பகுதியில் கடும் காயங்கள் ஏற்பட்டன. உடனே அரு கில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மிக மோசமான நிலையில் இருந்தார். இதனால் மேல் சிகிச்சைக்கு, சேலம் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்
பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவு, கல்லீரல் மற்றும் ரத்த நாள சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழு பரிசோதித்ததில், பெண் கல்லீரலில் கடும் காயம் ஏற்பட்டு, உள் ரத்த கசிவு ஏற்
பட்டதை கண்டறிந்தனர்.உயிரை காப்பாற்ற, ஆஞ்சியோகிராம் மற்றும் எம்போலைசேஷன் போன்ற உயர்தொழில்நுட்ப சிகிச்சை அவசியம் என முடிவானது. அதன்படி, பாதிக்கப்பட்ட ரத்தநாளத்தில் சிறு பொருள்களை செலுத்தி, ரத்த கசிவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இச்சிகிச்சையை, கல்லீரல் பிரிவு தலைமை மருத்துவர் ரவிகுமார், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி நிபுணர் சந்தோஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், மிக துல்லியமாக, இரவோடு இரவாக மேற்கொண்டனர்.
தொழில்நுட்ப முன்னே ற்றத்துடன் கூடிய துரித சிகிச்சை வழங்கப்பட்ட தால், ரத்தக்கசிவு கட்டுப்
படுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த தீவிர கவனிப்பு, மருத்துவமனையின் சேவையால், அந்த பெண், சில நாட்களில் நலமாகி வீடு திரும்பினார்.