/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலைகளில் தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு
/
நீர்நிலைகளில் தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு
ADDED : செப் 01, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்;மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழு சார்பில், அங்குள்ள பழைய பாலம் அருகே காவிரி படித்துறையில், நீர்நிலைகளுக்கு செல்லும் மக்கள், தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு, செயல் விளக்க பயிற்சி நேற்று நடந்தது.
நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அதில் நீர்நிலையில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என, மக்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை, 16 வீரர்கள் அளித்தனர்.