ADDED : அக் 25, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கல்லாங்குத்து, கணக்கர் தெருவை சேர்ந்தவர் ஹபாதஸ்நீம், 22. கரகாட்ட தொழில் செய்து வந்தார்.
இவரது கணவர் வேலுமணி, 27. தம்பதி இடையே, 2019 பிப்., 21ல் தகராறு ஏற்பட்டது. அப்போது வேலுமணி அடித்ததில், தலையில் காயம் அடைந்த ஹீபாதஸ்நீம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து, வேலுமணியை கைது செய்தனர். இந்த வழக்கில் வேலுமணிக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரேணுகா நேற்று உத்தரவிட்டார்.

