sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உருவான நாள் விழா

/

உருவான நாள் விழா

உருவான நாள் விழா

உருவான நாள் விழா


ADDED : டிச 02, 2025 02:24 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் சாரதா கல்லுாரி பேரவையும், சேலம் வரலாற்று சங்கமும் இணைந்து, 'அரசியல் சாசனமும் நமது பெருமையும்' - என்ற நிகழ்வை கொண்டாடியது.

சேலம் சாரதா கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வரலாற்று சங்கத்தின் செயல் தலைவரும், தேசிய சமூக இலக்கிய பேரவையின் மாநில தலைவருமான தாரை குமரவேலு பேசியதாவது:

இந்தியா விடுதலைக்குப்பின், நமக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 1949 நவ., 26-ம் தேதியன்று முழுவடிவமைத்து அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் 61- நாட்களுக்கு பிறகு இந்திய குடியரசு நாளாக 1950- ஜனவரி 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. காரணம் 1929- டிச., 19-ம் தேதியன்று லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இனி வரும் ஜன., 26- ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திரமாக அறிவித்து அதன்படி கொண்டாடி வந்தோம். அந்த நாளை நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஜன., 26-ம் தேதியை குடியரசு தினமாக அறிவித்தார்.

இவ்வாறு பேசினார்.

வரலாற்றுச்சங்க பொதுச் செயலாளர் பர்ணபாஸ், கல்லுாரி பேராசிரியர்கள் கோமதி, சுபஸ்ரீ மற்றும் துணை பேராசிரியர்கள், மாணவியர் தர்சணா, சுவாதி மற்றும் 150-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us