/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் ஓட்டம்
/
ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் ஓட்டம்
ADDED : டிச 02, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் தாதகாப்பட்டி, பாரதி நகர் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கிருந்து நேற்று மாலை, ஒருவர் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்துவதாக, பொதுமக்களிடம் தகவல் பரவியது. இதில், பலரும் சேர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்ற போது, அங்கு தனியாக, 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டை எடுத்து வைக்கப்பட்டிருப்பதும், அதை வாலிபர் ஒருவர் பைக்கில் எடுத்து செல்ல முயற்சித்ததும் தெரியவந்தது.
பொதுமக்கள் சூழ்ந்த நிலையில், வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

