/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீப்பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
தீப்பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தீப்பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தீப்பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : டிச 02, 2025 02:24 AM
இடைப்பாடி, இடைப்பாடியில், புகழ் பெற்ற தீப்பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இடைப்பாடியில் உள்ள தீப்பாஞ்சாலியம்மன், செல்வ விநாயகர், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு கோவில் கட்ட, கடந்த மார்ச் மாதத்தில் கால்கோள் நடப்பட்டு, கோபுரம் மற்றும் கட்டட பணி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்திற்காக கடந்த மாதம், 23ல் யாகசாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கோபுர கலசங்கள் மீது தெளிப்பதற்காக கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, புனிதநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் புனிதநீரை செல்வவிநாயகர், தீப்பாஞ்சாலியம்மன், சப்த கன்னிமார் தெய்வங்களின் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசியல் சாசனம்