/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடு, மாடு சந்தையில்ரூ.1.19 கோடிக்கு விற்பனை
/
ஆடு, மாடு சந்தையில்ரூ.1.19 கோடிக்கு விற்பனை
ADDED : மார் 18, 2025 02:08 AM
ஆடு, மாடு சந்தையில்ரூ.1.19 கோடிக்கு விற்பனை
அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை நேற்று கூடியது. காங்கேயம், வடகத்தி மாடு, தெற்கத்தி மாடு ஜெர்சி, பசுமாடு என, 820 மாடுகள் வரை கொண்டுவரப்பட்டன. கன்றுகள், 3,900 முதல், 7,800 ரூபாய், மாடுகள் ரகத்தை பொறுத்து, 7,500 முதல், 60,000 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 83 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வாழப்பாடி, பேளூர் ஆட்டுச்சந்தைக்கு, 1,200 ஆடுகள் வரை கொண்டுவரப்பட்டன. 10 கிலோ கிடா ரகத்துக்கேற்ப, 4,200 முதல், 6,700 ரூபாய், பெண் ஆடு, 3,400 முதல், 5,200 ரூபாய் வரை விற்பனையானது. இதன்மூலம், 36 லட்சம் ரூபாய் வரை
வர்த்தகம் நடந்தது.