/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனல்மின் நிலைய 3வது அலகில்100 நாளுக்கு பின் சீரமைப்பு பணி
/
அனல்மின் நிலைய 3வது அலகில்100 நாளுக்கு பின் சீரமைப்பு பணி
அனல்மின் நிலைய 3வது அலகில்100 நாளுக்கு பின் சீரமைப்பு பணி
அனல்மின் நிலைய 3வது அலகில்100 நாளுக்கு பின் சீரமைப்பு பணி
ADDED : ஏப் 06, 2025 01:46 AM
அனல்மின் நிலைய 3வது அலகில்100 நாளுக்கு பின் சீரமைப்பு பணி
மேட்டூர்:மேட்டூரில், 1987ல் கட்டிய, 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த டிச., 19ல், 3வது அலகில் பராமரிப்பு நடந்தபோது விபத்து ஏற்பட்டு, 2 ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்தனர். 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
இதனால், 3வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், 100 நாட்களுக்கு பின் கடந்த, 29ல், 130 கோடி ரூபாய் செலவில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சீரமைப்பு பணிக்கு பூஜை போடப்பட்டது. தற்போது சீரமைப்பு பணி நடக்கிறது. அப்பணியை, மின்கழக நிர்வாக இயக்குனர் வர்கீஸ், நேற்று பார்வையிட்டார். பழைய, புதிய அனல்மின் நிலைய தலைமை பொறியாளர்கள் விவேகானந்தன், நவ்ஷாத் உடனிருந்தனர்.
'முதல்கட்ட சீரமைப்பு பணி இரு வாரங்களில் முடிந்து, குறைந்தபட்சம், 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தொடர்ந்து சீரமைப்பு பணி நடக்கும். அது முடிந்ததும் முழு மின் உற்பத்தி நடக்கும்' என, அனல்மின் நிலைய பொறியாளர்கள்
தெரிவித்தனர்.