ADDED : ஜூலை 06, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் லோகநாதன், 48.
முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளராக உள்ளார். 2022 மே, 15ல், 'ஆக்டிவா' மொபட்டை சாலையோரம் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். இரவு, 10:00 மணிக்கு திரும்பி வந்தபோது மொபட் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆருண் ரசீத், 32, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 1ல் நடந்தது. நேற்று அவருக்கு, 8 மாத சிறை தண்டனை வழங்கி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.