/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை
/
அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை
ADDED : ஆக 08, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் அறிக்கை:
நாட்டின், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள், சூரமங்கலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்கப்படுகிறது. ஒரு கொடி, 25 ரூபாய். மக்கள், வீடுகள் அருகே உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வாங்கி கொள்ளலாம். ஆன்லைன் மூலம் தேசிய கொடி வாங்க விரும்புவோர், http://www.epostoffice.goc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடி பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு, 0427 - 2448014 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்