/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு நாளை துவக்கம்
/
சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு நாளை துவக்கம்
சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு நாளை துவக்கம்
சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு நாளை துவக்கம்
ADDED : பிப் 25, 2025 06:54 AM
சேலம்: சேலம் மண்டலத்தில் மருத்துவ துறையில் முன்னோடியாக திகழும், ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில், நாளை குடலிறக்க (ஹெர்னியா) சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்கப்பட உள்ளது.
இது குறித்து, ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அர்த்தநாரி தலைமையில் நிரு-பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன் குமார், குடலிறக்கம் (ஹெர்னியா) உரு-வாக காரணங்கள், வகைகள் (வயிற்றின் அடிப்பகுதி, நடுப்பகுதி அல்லது பெரிய அறுவை சிகிச்சை தழும்பில் ஏற்படும் குடலிறக்-கங்கள்) மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும், லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் முழுமையாக சரிசெய்ய முடியும் என்பதை கூறினார்.
டாக்டர் அர்த்தநாரி கூறுகையில், ''குடலிறக்க (ஹெர்னியா) சிகிச்சை பிரிவில் அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள். செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். 24 மணி நேர அவசர சிகிச்சை வசதி உள்ளது. நவீன லேப்ராஸ்-கோப்பி வசதியுடன் கூடிய அறுவை அரங்குகள், அறுவை சிகிச்-சைக்கு பிறகு தேவைப்படும் தீவிர சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவம் ஆகிய வசதிகள் உள்ளன,'' என்றார்.
குடலிறக்கம் (ஹெர்னியா) பற்றிய சந்தேகங்கள் மற்றும் பிற தக-வல்கள் அறிய, 0427-2555000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையலாம்.ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை டாக்டர்கள் மிதுன் குமார், ராஜேஷ், ஜெயதேவ், சுப்ரமணியன், ராஜ்குமார், மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

