/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்
/
சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்
சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்
சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்
ADDED : செப் 04, 2024 09:16 AM
வீரபாண்டி: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, மூன்று நாட்-களே உள்ள நிலையில், சிலை வைத்து வழி-பாடு செய்பவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி பெறுவது அவசியம்.இதுகுறித்து, ஆட்டையாம்பட்டி போலீசார் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சாலை-யோரங்களில் மற்றும் பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்துபவர்கள், தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வழிபாட்டு குழுவினரின் முழு முகவரி, மொபைல் எண்களுடன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பகுதியை, தீயணைப்பு படை-யினர் பார்வையிட்டு தடையில்லா சான்று கொடுத்த பின் அனுமதி வழங்கப்படும். சிலை வைக்க போடும் பந்தல், கீற்று கொட்டகையாக இல்லாமல் தீப்பிடிக்காத தகர கொட்டகையாக இருக்க வேண்டும். பந்தலுக்கு அருகே, 200 லிட்டர் தண்ணீர் நிரப்பிய பேரல் இருக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது என்ற எச்ச-ரிக்கை அறிவிப்பு மற்றும் தீயை அணைக்க, மூன்று வாளிகளில் மணல் அல்லது தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இதுவரை விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த, 41 பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்-துள்ளனர். அனுமதிக்கு விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினர்.